இந்தியா விளையாடும் எல்லாப் போட்டிகளையும் காணவுள்ளேன்: விஜய் மல்லையா அறிவிப்பு!

கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்றார்...
இந்தியா விளையாடும் எல்லாப் போட்டிகளையும் காணவுள்ளேன்: விஜய் மல்லையா அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியை உற்சாகப்படுத்துவதற்காக இந்திய அணி விளையாடும் எல்லாப் போட்டிகளையும் காணவுள்ளேன் என்று விஜய் மல்லையா அறிவித்துள்ளார்.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தைத் தொடங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடம் இருந்து ரூ.9,200 கோடியை கடனாகப் பெற்ற விஜய் மல்லையா அவற்றை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தவில்லை. இது தொடர்பாக வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் அவர் இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்து விட்டார்.

கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியாவில் இருந்து லண்டனுக்கு மல்லையா தப்பிச் சென்றார். எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது மட்டுமன்றி, பல்வேறு காசோலை மோசடி வழக்குகள், தொழில் செய்வதாக வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டில் சொத்து வாங்கியது, அன்னியச் செலாவணி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மல்லையா மீது உள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள எட்பாஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மோதிய சாம்பியன்ஸ் டிராபி போட்டியைக் காண மல்லையா வந்திருந்தார். பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து அவர் ஆட்டத்தைப் பார்த்தது அதிக கவனத்தை ஈர்த்தது. அவரும் சுனில் கவாஸ்கரும் இணைந்து உரையாடிய புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

இதையடுத்து விஜய் மல்லையா ட்விட்டரில் தெரிவித்ததாவது: 

இந்தியா - பாகிஸ்தான் போட்டியைக் காண நான் வந்ததற்கு ஊடக வெளிச்சம் மிக அதிகமாகக் கிடைத்துள்ளது. இந்தியாவை உற்சாகப்படுத்தவேண்டும் என்பதற்காக எல்லாப் போட்டிகளையும் காணவுள்ளேன் என்று கூறியவர் கோலியையும் பாராட்டியுள்ளார். உலகின் மிகச்சிறந்த வீரர், மிகச்சிறந்த கேப்டன், பண்பான மனிதர் என்று கோலியைக் குறிப்பிட்டுள்ளார் மல்லையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com