நில ஒதுக்கீட்டில் முறைகேடு: ஹரியாணா முன்னாள் முதல்வரிடம் சிபிஐ விசாரணை

ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவிடம் சிபிஐ திங்கள்கிழமை


ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலாவில் தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவிடம் சிபிஐ திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டது.
இதுதொடர்பாக, சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: பஞ்ச்குலா நில ஒதுக்கீட்டில் அப்பட்டமான விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. நில ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசி தேதி 2012-ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்று நிறைவடைந்த நிலையில், நிலங்கள் ஒதுக்கப்பட்ட 14 பேரும் அதே மாதம் 24-ஆம் தேதி தான் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். மேலும், தகுதியற்ற பயனாளிகளுக்கு சந்தை மதிப்பை விட குறைவான மதிப்பில் நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அப்போதைய முதல்வரும், ஹரியாணா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா, அந்த ஆணையத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி எஸ்.சி.கன்ஸல், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.பி.எஸ்.நாகல் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2012-இல் பஞ்ச்குலா நகரிலுள்ள நிலங்கள், 14 தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதில், அப்போதைய முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அவரது முதன்மை செயலாளராக இருந்த சத்தார் சிங் உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com