விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஜூன் 10-இல் ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் பிரச்னையை முன்னிறுத்தி, நாடு முழுவதும் வரும் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

விவசாயிகளின் பிரச்னையை முன்னிறுத்தி, நாடு முழுவதும் வரும் 10-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸும் பங்கேற்றார்.

பின்னர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியை, அமைப்புரீதியாக நாடு முழுவதும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், விவசாயிகளின் பிரச்னையை முன்னிறுத்தி, வரும் 10-ஆம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.

நாட்டில் எங்கெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனரோ, அங்கெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அண்மையில் பொறுப்பேற்றது முதல் இதுவரை 60 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதுபோல், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் விவசாயிகள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார் அவர்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் சிங், அதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com