உத்ராகண்ட் சந்தைகளில் 'பிளாஸ்டிக் அரிசி' விற்பனை: அதிர்ச்சியில் மக்கள் 

உத்ராகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் பிளாஸ்டிக் அரிசி வெளிப்படையாகவே விற்கப்படுகிறது.
உத்ராகண்ட் சந்தைகளில் 'பிளாஸ்டிக் அரிசி' விற்பனை: அதிர்ச்சியில் மக்கள் 

உத்ராகண்ட்: உத்ராகண்ட் மாநிலம் ஹல்த்வானி மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் பிளாஸ்டிக் அரிசி வெளிப்படையாகவே விற்கப்படுகிறது.

ஹல்த்வானி சந்தையில் வாங்கப்பட்ட அரிசியை ஒரு குடும்பத்தினர் வாங்கி வந்து சமைத்த போது அதன் சுவை வேறுபட்டு இருப்பதை அறிந்தனர்.

இந்த தகவல், பிளாஸ்டிக் அரிசியால் செய்த சாதத்தை உருட்டி அதைக் கொண்டு சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் விடியோ சமூக தளங்களில் பரவியதை அடுத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இணைந்த குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தி, பிளாஸ்டிக் அரிசி விற்பனை உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் கடந்த மாதம் பிளாஸ்டிக் முட்டை குறித்து ஒரு பெண்மணி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  இதையடுத்து கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், தற்போது உத்ராகண்டில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com