மகாராஷ்டிர அரசில் இருந்து விலக பாஜக கூட்டணிக் கட்சி முடிவு?

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஸ்வபிமானி சேத்காரி சங்கத்னா கட்சித் தலைவர் ராஜு ஷெட்டி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஸ்வபிமானி சேத்காரி சங்கத்னா கட்சித் தலைவர் ராஜு ஷெட்டி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக கட்சி நடத்தி வரும் ராஜு ஷெட்டி, மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பதில் பாஜக அரசு சிறப்பாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜு ஷெட்டி மக்களவை எம்.பி.யாக உள்ளார். அவரது கட்சிக்கு மகாராஷ்டிரத்தில் ஒரே ஒரு எம்எல்ஏ மட்டும்தான் உள்ளார். விவசாயத் துறை இணையமைச்சராக உள்ள அவரும், பாஜகவில் இணைந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ராஜு ஷெட்டி கூறியதாவது:
மகாராஷ்டிர பாஜக அரசில் அங்கும் வகிப்பது எங்கள் கட்சிக்கு அவமானமாக உள்ளது. ஆட்சியில் இருந்து விலகுவது குறித்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
எங்கள் கட்சி சார்பில் விவசாயத் துறை இணையமைச்சராக உள்ள சதாபாவ் கோட் விவசாயிகளின் போராட்டத்தை முறியடிக்கவே முயற்சிக்கிறார். கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு அவர் வர வேண்டும். அப்போது அவரது செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com