என் வீட்டிற்கே அடிக்கடி கரண்ட் கட்டா?  மின்வாரிய ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற நீதிபதி!

தனது வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் எரிச்சலான ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர். மின்வாரிய ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
என் வீட்டிற்கே அடிக்கடி கரண்ட் கட்டா?  மின்வாரிய ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வு பெற்ற நீதிபதி!

குர்கான்: தனது வீடு இருக்கும் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் எரிச்சலான ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர். மின்வாரிய ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ளது சிவில் லைன்ஸ் பகுதி. இங்கே ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராகவ் என்பவர் வசித்து வருகிறார்.இந்த பகுதியில் சமீபத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராகவ் கடுமையான எரிச்சலிலில் இருந்துள்ளார். நேற்று மாலை மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் லைன் ஊழியர்கள் பழுதடைந்த மின்கம்பிகளை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அங்கே வந்த ராகவ் தன கையில் இருந்த துப்பாக்கியால் முதலில் வானத்தை நோக்கி சில ரவுண்டுகளை சுட்டார்.பின்னர் பணியில் இருந்த ஊழியர்களை நோக்கியும் அவர் சுட்டிருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டுகள் படவில்லை. அவரது இந்த செய்கையினால் அங்கே இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் உடனடியாக அவர் மீது சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ராகவ் மீது தற்பொழுது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com