ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? தெலங்கானா அரசு விசாரணை

ஹைதராபாத் சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தெலங்கானா மாநில உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? தெலங்கானா அரசு விசாரணை

ஹைதராபாத் சந்தையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து தெலங்கானா மாநில உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதராபாத் நகரின் சில பகுதிகளில் வசிக்கும் பொது மக்களும், விடுதி ஒன்றைச் சேர்ந்தவர்களும் தாங்கள் சமையலுக்கு வாங்கிய அரிசி, தடிமனாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருந்ததாக குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர். மேலும் அந்த அரிசியை, பிளாஸ்டிக் அரிசி என்றும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்த தகவலின்பேரில், தெலங்கானா மாநில உணவு விநியோகத்துறை ஆணையர் சி.வி. ஆனந்த், குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து அரிசியின் மாதிரிகளை சோதனைக்கு சேகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி அரிசியின் மாதிரிகளை கைப்பற்றி பரிசோதனை கூடத்துக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பான விரிவான ஆய்வு அறிக்கை வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படலாம் என்று உணவு விநியோகத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தின் நந்தவனம் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவர் கூறும்போது, தாம் வாங்கிய அரிசியை சமைத்தபோது, அது பிளாஸ்டிக் அரிசி என்பது தெரிய வந்ததாக தெரிவித்தார். இதுகுறித்து மீர்பேட் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால் காவல்துறை தரப்பிலோ, புகார் தெரிவித்தவர் அளித்த அரிசியை சோதனை நடத்தியதில், அது பிளாஸ்டிக் அரிசி அல்ல என்று தெரிய வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மாநில உணவு விநியோகத்துறைக்கு தெரியப்படுத்தியிருப்பதுடன், அரிசியின் மாதிரியையும் உணவு விநியோகத்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com