உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயார்

உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயார்

உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
ராணுவத்தை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு அளித்து வருகிறது. ராணுவத் தளவாடங்களை இந்தியாவில் உருவாக்கும் திட்டம் சிறப்பானது. இதன் பலன்கள் அடுத்த சில ஆண்டுகளில் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.
அண்டை நாடுகள் உள்ளிட்ட எந்த வெளிநாடுகளுடன் ஏற்படும் போரையும், உள்நாட்டு தீவிரவாதிகளுடனான அச்சுறுத்தலையும் முழு அளவில் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது.
ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது என்று நான் கூறுவது எந்த நாட்டுக்கும் எதிரான கருத்து அல்ல. எனினும், எந்த விதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ராணுவத்துக்கு புதிய வீரர்களை சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராணுவத்துக்காக தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு முழுமையாகப் பயிற்சியளித்து சிறப்பாக தயார் செய்வதற்கு 3 ஆண்டுகள் வரை ஆகிறது என்றார் அவர்.
"இந்திய-சீன எல்லையில் கடந்த 40 ஆண்டுகளில் ஒரு தோட்டா கூட பாயவில்லை' என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில், ராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com