ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தங்க வணிகம் செழிக்கும்: உலக தங்க கவுன்சில்

ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தங்க வணிகம் செழிக்கும் என உலக தங்க கவுன்சில்
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தங்க வணிகம் செழிக்கும்: உலக தங்க கவுன்சில்

மும்பை: ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தங்க வணிகம் செழிக்கும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி காரணமாக தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய வரிவிதிப்பு முறையால் தங்க வணிகத்தின் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் எனவும் தங்க வணிகத்தின் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

90களின் முற்பகுதியில் பொருளாதார ரீதியான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைப் போல் இப்போது இந்த ஒற்றைச் சாளர வரிவிதிப்பு முறையாலும் பல்வேறு சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

தங்கம் விலை உயர்வு காரணமாக சில காலங்களுக்கு வியாபாரிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சில சிரமங்கள் ஏற்படும் என்றாலும் போகப் போக தங்கம் தொடர்பான வணிகம் செழித்து வளரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தங்க வணிகம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒழுங்கு முறையுடன் நடைபெற்று வருவதாகவும் வாடிக்கையாளர்களுக்கு இது நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com