வங்க மொழியை கட்டாயமாக்க எதிர்ப்பு: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் வன்முறை

வங்க மொழியை மேற்கு வங்கத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க உத்தரவிட்டதை எதிர்த்து டார்ஜிலிங் நகரில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் வியாழக்கிழமை நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
வங்க மொழியை மேற்கு வங்கத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க உத்தரவிட்டதை எதிர்த்து டார்ஜிலிங் நகரில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் வியாழக்கிழமை நடத்திய போராட்டத்தின்போது தீவைத்துக் கொளுத்தப்
வங்க மொழியை மேற்கு வங்கத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க உத்தரவிட்டதை எதிர்த்து டார்ஜிலிங் நகரில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் வியாழக்கிழமை நடத்திய போராட்டத்தின்போது தீவைத்துக் கொளுத்தப்

வங்க மொழியை மேற்கு வங்கத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் கற்பிக்க உத்தரவிட்டதை எதிர்த்து டார்ஜிலிங் நகரில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர் வியாழக்கிழமை நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் வங்க மொழியை கட்டாயமாக்கி முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் உத்தரவிட்டார். இதற்கு டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப்பகுதி மாவட்டங்களில் எதிர்ப்பு கிளம்பியது. முக்கியமாக கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த அமைப்பினர் கோர்க்காலாந்து என்ற தனி நாடு கோரி போராடி வருகின்றனர்.
இந்நிலையில், டார்ஜிலிங் நகரில் மம்தா தலைமையில் மேற்கு வங்க மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற இடம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு பெரும் வன்முறை வெடித்தது. போலீஸார் ஏற்படுத்தி இருந்த தடுப்புகளை உடைத்த வன்முறையாளர்கள், சரமாரியாக கற்களை வீசி போலீஸாரைத் தாக்கினர்.
அப்பகுதியில் இருந்த கடைகளும், போலீஸ் வாகனங்களுக்கும் வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இதையடுத்து, போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை விரட்டியடித்தனர்.
அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதை அடுத்து மாநில அரசு சார்பில் ராணுவ உதவி கோரப்பட்டது.
இதையடுத்து 160 ராணுவ வீர்கள் அடங்கிய ராணுவப் படைப் பிரிவு டார்ஜிலிங் நகரில் குவிக்கப்பட்டுள்ளது. டார்ஜிலிங்கில் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்தவும் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதனிடையே, "வங்க மொழியை மாநில அரசு திணிக்கவில்லை என்றும் மலை மாவட்டங்களில் நேபாள மொழிக்கு அங்கீகாரம் அளிக்கத் தயாராக இருக்கிறோம்' என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com