திருப்பதி லட்டுக்கும் இனி ஆதார் கட்டாயம்

ஆதார் அட்டை இல்லாதவர்களும் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்று நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், இனி திருப்பதி லட்டு பெற ஆதார் அட்டை கட்டாயம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி என்றால் நம் அனைவரது நினைவுக்கும் வருவது நெய் மணம் மணக்கும் முந்திரி திராட்சைகள் நிறைந்த பிரசாதமான லட்டுதான். திருப்பதிக்குத் தினமும் பலதரப்பட்ட பக்தர்கள் கூட்டம் வந்து செல்கின்றன, அவர்கள் அனைவருக்கும் தேவஸ்தான பிரசாதமாக லட்டு வழங்கப் படுகிறது. இந்நிலையில் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே இனி லட்டு வழங்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ஏற்கனவே இணையம் மூலம் ஏழுமலையானை தரிசிக்கவும், தங்குவதற்கான அறைகள் முன்பதிவு செய்வதற்கும் ஆதார் அட்டையை நிர்வாகம் கட்டாயமாக்கி இருந்தது. அதைனையடுத்து இப்பொழுது திருப்பதி லட்டுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதனால் முறைகேடு ஏதுமில்லாமல் பக்தர்களுக்கு வெளிப்படியான சேவையை தர முடியும் என்று நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com