காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அமைச்சர் உறுதி

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அமைச்சர் உறுதி

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கடந்த 3 ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தொழில்துறை வளர்ச்சியில் இந்தியா முன்னேற்றம் அடைந்திருக்கிறது. மேக் இன் இந்தியா மூலம் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கு மூலதனம் வந்திருக்கிறது. இந்தியத் தொழில்துறை நிலையான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. உற்பத்தித் துறையிலும் மூலதன நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கின்றன. பொருள்கள் தயாரிப்பு கட்டமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
எந்த பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவில்லை. வளர்ச்சி அடையாமல் தவிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசு பங்குகளைக் குறைத்து, அதில் தனியாரின் முதலீட்டை பெற்று, அந்த நிறுவனங்களை வளர்ச்சியடைய செய்ய வைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.
திருச்சியில் பெல் நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கடந்த ஓராண்டு காலமாக பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதனால்தான் கடந்தாட்சியில் நலிந்த நிலையில் இருந்த சிறு, குறுத் தொழில் நிறுவனங்கள் நல்ல நிலையில் உள்ளன.
காவிரிப் பிரச்னை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசு அதில் தலையிடவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் நிறைவேற்றிதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தோம். நீதிமன்றமும் அந்த கருத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஜிஎஸ்டியால் தமிழகத்துக்குப் பாதிப்பு என்று தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு வராது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்றவில்லை. இச்சட்டம் நிறைவேறினால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டுத் தொகையைத் தர வேண்டும் என்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தின. ஆனால், அப்போதைய மத்திய அரசு சிறு நடவடிக்கைக்கூட எடுக்கவில்லை.
ஆனால், தற்போதைய மத்திய அரசின் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் மாநிலங்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கின்றன.
மகாத்மா காந்தி குறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா எந்த தவறான கருத்தையும் கூறவில்லை. அவர் கூறிய கருத்து திரித்து விடப்பட்டிருக்கிறது என்றார் நிர்மலா சீதாராமன்.
பேட்டியின் போது, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், கட்சி நிர்வாகிகள் இல.கண்ணன், தங்க.ராஜய்யன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com