பல்வேறு நவீன வசதிகளுடன் புல்லட் ரயில்: ரயில்வே அறிவிப்பு

நமது நாட்டில் முதன்முறையாக மும்பை-ஆமாதாபாத் இடையே இயக்கப்பட உள்ள புல்லட் ரயிலில் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்வேறு நவீன வசதிகளுடன் புல்லட் ரயில்: ரயில்வே அறிவிப்பு

நமது நாட்டில் முதன்முறையாக மும்பை-ஆமாதாபாத் இடையே இயக்கப்பட உள்ள புல்லட் ரயிலில் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுமார் ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான 25 ஈ5 ஷிங்காசென் வகை புல்லட் ரயில்களை ஜப்பானிடம் இருந்து வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இந்தியாவில் முதல் முறையாக மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் மொத்தம் 731 இருக்கைகள் இருக்கும். மேலும், பல்வேறு நவீன வசதிகளும் இந்த ரயிலில் இருக்கும். ஆண்கள், பெண்களுக்கு தனி கழிவறைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக இடவசதியுடன் கூடிய கழிவறைகளும் இந்த ரயிலில் இருக்கும். ஓய்வறைகளும், குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக பெண்களுக்கு தனி அறைகளும் இந்த ரயிலில் இருக்கும்.
மும்பை-ஆமதாபாத் இடையே உள்ள 508 கி.மீ. தொலைவை 2 மணி நேரம் 7 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும்.
சாதாரண வகுப்பில் 698 இருக்கைகளும், பிஸினஸ் வகுப்பில் 55 இருக்கைகளும் இந்த ரயிலில் இருக்கும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com