மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது வளையல் வீச்சு – காங். பிரமுகர் ஆவேசம்

குஜராத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது, காங்கிரஸ் பிரமுகர் வளையல்களை வீசினார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது வளையல் வீச்சு – காங். பிரமுகர் ஆவேசம்

அகமதாபாத்: குஜராத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி மீது, காங்கிரஸ் பிரமுகர் வளையல்களை வீசினார்.

அம்ரேலி நகரில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில், நரேந்திர மோடி அரசின் 3 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ஸ்மிருதி இரானி மேடையில் பேச தொடங்கினார்.

அப்போது கூட்டத்திலிருந்த அமேரிலி மாவட்டம் மோடா பன்டரியா கிராமத்தைச் சேர்ந்தவர் கேதன் காஸ்வாலா (20) என்பவர், வந்தே மாதரம் என்று முழக்கமிட்டபடி, அவரை நோக்கி ஆவேசத்துடன் வளையல்களை வீசினார்.

தூரத்தில் இருந்து வீசப்பட்டதால் அமைச்சரின் மீது வளையல்கள் படவில்லை. எனினும், அந்த நபரை பிடித்த போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

விசாரணையில், அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும், வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இவ்வாறு செய்ததும் தெரியவந்தது.

வேளாண் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பாஜகவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்காக வந்த சுமார் 25 காங்கிரஸ் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

மோடியின் சொந்த மாநிலத்தில் மத்திய அமைச்சர்கள் மீது ஷூ, வலையல் வீசப்பட்டது இரண்டாவது சம்பவமாகும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாட்டின் கல்வி பயிலும் இளைஞர்களுக்கு எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி, கடந்த மே 28 ஆம் தேதி ஹரிதாக் படேல் தலைமையிலான பாடிதார் அனாமத் அண்டோனான் சமிதியினர் பாவ்நகர் மாவட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சு மந்தவ்யா மீது ஷூவை வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com