கர்ப்பிணிகள் தாம்பத்யத்தை தவிர்க்க வேண்டும் என சொல்லவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

கர்ப்பிணிப் பெண்கள் தாம்பத்யத்தை தவிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை என மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார்.


புது தில்லி: கர்ப்பிணிப் பெண்கள் தாம்பத்யத்தை தவிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை என மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியுள்ளார்.

கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினால், காம உணர்வை அடக்க வேண்டும், முட்டை சாப்பிடக் கூடாது என்று மத்திய அரசு வழங்கிய கையேட்டில் கூறப்பட்டிருந்தது சர்ச்சைக்குள்ளானது. 

ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட 'தாயும், பிள்ளை பராமரிப்பும்' என்ற கையேட்டினை மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் வெளியிட்டார்.

அதில், கர்ப்பிணிப் பெண்கள் தங்களது சுய விருப்பம், கோபம், அன்பு, வெறுப்பு, காமம் ஆகியவற்றில் இருந்து தள்ளியிருக்க வேண்டும். தவறான மனிதர்களுடன் நட்பு வேண்டாம், நல்ல மனிதர்களுடன் இருங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் நாயக் கூறுகையில், அந்த கையேடு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் யோகா பயிற்சி குறித்து விளக்கப்பட்டிருக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த கையேட்டில், கர்ப்பிணிகள் தாம்பத்யம் கொள்ளக் கூடாது என்று சொல்லப்படவில்லை என்றும் கூறினார்.

ஆனால், அந்த கையட்டில், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய பட்டியலில் தாம்பத்யமு உள்ளது. அது மட்டும் அல்ல, தேனீர், காபி, சர்க்கரை, மைதா உணவு பொருட்கள், கரம் மசாலா, வறுத்த உணவு பொருட்கள், முட்டை மற்றும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும், ஆன்மிகத் தலைவர்களின் புத்தகங்களை படிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் வீட்டில் நல்ல அழகான புகைப்படங்களை மாட்டி வைக்கமாறும் இதைப் பார்ப்பதால் ஏற்படும் உற்சாகத்தால், கருவில் வளரும் சிசுவுக்கு நேர்மறையான பலன்கள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com