குர்கான் கூட்டு பலாத்கார சம்பவம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

குர்கானில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஹரியாணா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), குர்கான் காவல் ஆணையர் ஆகியோருக்கு

குர்கானில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஹரியாணா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), குர்கான் காவல் ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குர்கான் அருகே கடந்த 29-ஆம் தேதி இரவு தனது 9 மாத குழந்தையுடன் தனியாக நடந்து சென்ற இளம்பெண் ஒருவருக்கு, தங்களது வாகனத்தில் லிப்ட் கொடுப்பது போல ஏமாற்றி 3 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. மேலும், அந்த குழந்தையையும் தூக்கிவீசி அவர்கள் கொலை செய்தனர்.

குர்கானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக ஹரியாணா மாநில காவல்துறை தலைமை இயக்குநர், குர்கான் காவல் ஆணையர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
குர்கான் அருகே நடைபெற்ற கூட்டு பலாத்கார சம்பவம், அப்பகுதியில் காவல்துறையினர் இரவு நேர ரோந்துப் பணி மேற்கொள்வதில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது. குர்கானில் பெண்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தேசிய தலைநகர் வலயப் பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகளை, தில்லி, ஃபரீதாபாத் காவல் ஆணையர்களும், நொய்டா, காஜியாபாத் காவல் கண்காணிப்பாளர்களும் 6 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com