ஆதரவு வாபஸ் பேச்சு எதிரொலி: உத்தவ் தாக்கரேவுடன் மகாராஷ்டிர அமைச்சர் சந்திப்பு

மகாராஷ்டிர பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறபோவதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கூறிய நிலையில், மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் அவரைச் சந்தித்துப்

மகாராஷ்டிர பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறபோவதாக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கூறிய நிலையில், மாநில அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
முன்னதாக, மகாராஷ்டிர விவசாயிகள் பெற்ற கடன் ஜூலை மாதத்துக்குள் தள்ளுபடி செய்யாவிட்டால் மாநிலத்தில் பாஜக அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.
இந்நிலையில், மாநில வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மும்பையில் உள்ள உத்தவ் தாக்கரே இல்லத்துக்குச் சென்று சந்தித்தார். அப்போது, மகாராஷ்டிர அரசு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி குறித்த முழுவிவரத்தையும் உத்தவ் தாக்கரேவிடம் சந்திரகாந்த் பாட்டீல் விளக்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகாந்த் பாட்டீல் கூறியதாவது: விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை உத்தவ் தாக்கரேவிடம் விரிவாக எடுத்
துரைத்தேன். அவர் அதனை ஏற்றுக் கொண்டார் என்றார்.
இடைத் தேர்தலுக்கு தயார் - பட்னவீஸ்: இதனிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றால் அதனைச் சந்திக்கத் தயாராக இருப்பதாக மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
சிலர் (சிவசேனை) ஆட்சிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம் என்றும், ஆட்சியைக் கவிழ்த்துவிடுவோம் என்றும் சிலர் கூறுகின்றனர். இடைத் தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதே அவர்களுக்கு எனது பதில் என்றார் அவர்.
மாநிலத்தில் விவசாயிகள் பிரச்னையால் பாஜகவுக்கும், அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பட்னவீஸ் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com