காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீரில் குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவதைத் தொடர்ந்து எல்லையில் துப்பாக்கியுடன் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வ

பாகிஸ்தான் ராணுவத்தால் கடந்த 4 தினங்களில் இதுபோன்று அத்துமீறி நடத்தப்பட்ட 9-ஆவது தாக்குதல் இதுவாகும். கடந்த ஜனவரி மாதம் முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடருகே இதுவரை மொத்தம் 12 தாக்குதல்கள் அந்நாட்டு ராணுவத்தால் அத்துமீறி நடத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புப் படையின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் மேத்தா, ஜம்முவில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ரஜௌரி, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் எல்லையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, நமது ராணுவத்தினர் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுத்தனர் என்றார் மணீஷ் மேத்தா.
காஷ்மீரில் கடந்த திங்கள்கிழமை மட்டும் 3 முறை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com