பெட்ரோல்-டீசல் விலை நிர்ணய நேரம் இனி காலை 6 மணி: மத்திய அமைச்சர்

பெட்ரோல், டீசலின் விலையை நாள்தோறும் நள்ளிரவு நேரத்தில் நிர்ணயிப்பதற்குப் பதிலாக காலை 6 மணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் விடுத்த கோரிக்கையை

பெட்ரோல், டீசலின் விலையை நாள்தோறும் நள்ளிரவு நேரத்தில் நிர்ணயிப்பதற்குப் பதிலாக காலை 6 மணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தார்.
பெட்ரோல்-டீசலின் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறை, புதுச்சேரி உள்ளிட்ட 5 குறிப்பிட்ட நகரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் சோதனை முயற்சியாக செயல்படுத்தின. இதைத் தொடர்ந்து, நாடு முழுமைக்கும் வெள்ளிக்கிழமை முதல் இந்த நடைமுறையை செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. இதற்கு பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், வெள்ளிக்கிழமை அன்று பெட்ரோல்- டீசலை வாங்கவோ, விற்பனை செய்யவோ மாட்டோம் என்றும் அறிவித்திருந்தனர்.
பெட்ரோல்-டீசல் விலை நாள்தோறும் நாளை முதல் நிர்ணயம்: நாடு முழுவதும் பெட்ரோல்-டீசலின் விலை வெள்ளிக்கிழமை முதல் (ஜூன் 16) நாள்தோறும் நிர்ணயிக்கப்படவுள்ளது.
இந்த விலை நிர்ணயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் தங்களது அறிவிப்பை புதன்கிழமை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் இந்த விவகாரம் தொடர்பாக பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் சங்கப் பிரதிநிதிகள் புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.
டீலர்களின் போராட்ட அறிவிப்பு வாபஸ்: பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அகில இந்திய பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் அசோக் பத்வார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மக்கள் நலனுக்காக, நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை செயல்படுத்துவது என்று அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல், நாங்களும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, வெள்ளிக்கிழமை நடத்தப் போவதாக அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்' என்றார். வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை பெட்ரோல் விற்பனை நிலைய டீலர்கள் வாபஸ் பெற்றதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி பெட்ரோல்-டீசலின் விலை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com