பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு முறையே ரூ.1.12, ரூ.1.24 நேற்று குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த புதிய விலை குறைப்பு
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அமலுக்கு வந்தது

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு முறையே ரூ.1.12, ரூ.1.24 நேற்று குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த புதிய விலை குறைப்பு அறிவிப்பானது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணி முதல் இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது.

இனி வரும் காலங்களில், எரிபொருள் விலையானது நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த புதிய நடைமுறை இன்று வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் அமலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் நாளுக்கான எரிபொருள் விலை நேற்று வெளியிடப்பட்டது.

சோதனை அடிப்படையில், விலையை தினமும் மாற்றி அமைக்கும் திட்டம் முதலில் சண்டிகர், ஜாம்ஷெட்பூர், புதுச்சேரி, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் மே 1 முதல் அறிமுகம் செய்யப்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவடைந்ததாலும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டதாக இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

சண்டிகர், ஜாம்ஷெட்பூர், புதுச்சேரி, உதய்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில், இவற்றின் விலையை தினமும் மாற்றி அமைக்கும் திட்டம் சோதனை அடிப்படையில், மே 1 முதல் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல், நாடு முழுவதும், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும், காலை 6 மணிக்கு இவற்றின் விலை நிர்ணயம் அமலுக்கு வந்தது.

மாதத்தின் இருமுறை விலையை மாற்றி அமைக்கும் திட்டத்தின் கீழ், பெட்ரோல், டீசல் விலை நேற்று குறைக்கப்பட்டுள்ளது. விலை மாற்றத்துக்குப் பிறகு, 'வாட்' வரி இல்லாமல், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 1.12 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 1.24 ரூபாயும் குறைந்துள்ளது. சென்னையில் ரூ.69.93-ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ.68.02-ஆகக் குறைந்துள்ளது. அதேபோன்று டீசலும் ரூ.59.22-இல் இருந்து ரூ.57.41-ஆகக் குறைந்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களைப் பொருத்து இந்த விலையில் சிறிய மாற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com