தவறான தகவல்களை பரப்புகிறார்கள், ராணுவம் மனித உரிமையை மீறவில்லை: தளபதி ராவத்

இந்திய ராணுவத்திற்கு எதிராகச் சிறுவர்கள் கல்வீச்சில் ஈடுபடுவதை முறையான வகையில் கையாள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், மனித உரிமை மீறல்களில் ராணுவம் என்றும் ஈடுபடுவதில்லை என்றார்
தவறான தகவல்களை பரப்புகிறார்கள், ராணுவம் மனித உரிமையை மீறவில்லை: தளபதி ராவத்

இந்திய ராணுவத்திற்கு எதிராகச் சிறுவர்கள் கல்வீச்சில் ஈடுபடுவதை முறையான வகையில் கையாள ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், மனித உரிமை மீறல்களில் ராணுவம் என்றும் ஈடுபடுவதில்லை என்றும் இந்திய ராணுவ தளபதி ராவத் கூறியுள்ளார்.

தெற்கு காஷ்மீர் பகுதியில் ராணுவ அதிகாரிகளின் மீது குழந்தைகள் கற்களை எறிந்ததைப் பற்றி ராணுவ தளபதி பிபின் ராவத் இடம் கேட்டபோது, இந்தச் சூழலை சமாளிக்க ராணுவத்தினருக்கு பயிற்சியளிக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

"தெற்கு காஷ்மீர் பகுதியில் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ராணுவம் மேற்கொண்டு வருகிறது, இதில் எந்த வகையான மனித உரிமையும் மீறப்படவில்லை” என்று அவர் கூறினார். 

தேசிய மாநாட்டுத் தலைவர்கள் இன்று மாணவ மாணவிகள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதை எதிர்த்து சட்ட பேரவைக்கு வெளியே தர்ணா போராட்டத்தை நடத்தினர். சமீபத்தில் ஃபாரூக் டார் என்னும் காஷ்மீர் வாழ் இந்தியர் ஒருவரைக் காவலர் வாகனத்தின் முன்பகுதியில் கட்டிப்போட்டு கல் வீச்சிலிருந்து ராணுவத்தைக் காக்க மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியதால் ராணுவம் பலதரப்பட்ட விமர்சனங்களைச் சந்திக்க நேரிட்டது. 

இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கே ராணுவ அதிகாரி ராவத் யாரோ தவறான செய்திகளை ஜம்மு காஷ்மீர் மக்கள் மத்தியில் பரவ செய்கிறார்கள், எந்த ஒரு மனித உரிமை மீறல்களிலும் ராணுவம் ஈடுபடவில்லை என்று கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com