கொச்சி மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார் மோடி: முதன் முதலாக சில விஷயங்கள்

கொச்சி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். முதல் பயணத்தை தொடங்கிய மெட்ரோ ரயிலிலும் அவர் பயணித்தார்.
கொச்சி மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்தார் மோடி: முதன் முதலாக சில விஷயங்கள்


கொச்சி: கொச்சி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் துவக்கி வைத்தார். முதல் பயணத்தை தொடங்கிய மெட்ரோ ரயிலிலும் அவர் பயணித்தார்.

கொச்சியில் இருக்கும் ஜவாஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு மெட்ரோ ரயில் வர்த்தக சேவை தொடக்க விழா நடைபெற்றது.

அப்போது அவர் பாலாரிவட்டத்தில் இருந்து பத்தடிப்பாலம் வரையிலும் மெட்ரோ ரயிலில் பயணித்த மோடி அதே ரயிலில் பாலாரிவட்டத்துக்கு திரும்பினார்.
 

அவருடன், கேரள ஆளுநர் பி. சதாசிவம், முதல்வர் பிரனாயி விஜயன், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஈ. ஸ்ரீதரன் உள்ளிட்டோரும் மெட்ரோ ரயிலில் பயணித்தனர்.

பாலாரிவட்டம் ரயில் நிலையத்தில் ரிப்பனை வெட்டி மெட்ரோ ரயில் நிலையத்தைத் திறந்து வைத்த மோடி, முதல்வர் பினராயி விஜயனுக்கும், ஸ்ரீதரனுக்கும் கைலுக்கி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கொச்சியில் முதல்கட்டமாக ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரையிலும் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயிலின் வர்த்தக சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.

முதன் முதலாக.. 

1. கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவை, இந்தியாவின் முதல் பலதரப்பட்ட உள்கட்டமைப்புக் கொண்ட போக்குவரத்து சேவையாகும்.

2. நாட்டிலேயே, ஒரு அரசுப் பணிக்காக அதிக அளவில் திருநங்கைகள் பணியமர்த்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. மெட்ரோ ரயில் சேவையில் 23 திருநங்கைகள் பணியாற்றுகின்றனர்.

3. இந்த புதிய மெட்ரோ ரயில் சேவைதான், இந்தியாவிலேயே அதிக அளவில் சூரிய சக்தியை பயன்படுத்தும் திட்டமாகும். சுமார் 22 ரயில் நிலையங்களை இணைக்கும் 25 கி.மீ. நீளத்துக்கு சூரிய மின் சக்தி பயன்படுத்தப்படுகிறது.

4. கொச்சி மெட்ரோ ரயில் நிலையம், தனது மொத்த தேவையான மொத்த மின்சக்தியில் 25 சதவீதத்தை சூரிய ஒளி மின்சாரம் மூலம் பெற திட்டமிட்டுள்ளது.
 

5. கொச்சி மெட்ரோ ரயில் நிலையத்துக்காக அமைக்கப்பட்ட தூண்களில் உருவாக்கப்படும் தோட்டங்களுக்கு, நகராட்சிக் குப்பைக் கிடங்கில் இருந்து தயாரிக்கப்படும் உரத்தைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com