கொச்சி மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

கேரள மாநிலம், கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் வர்த்தக சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளார்.
கேரள மாநிலம், கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட இருக்கும் மெட்ரோ ரயிலின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம். நாள்: வெள்ளிக்கிழமை.
கேரள மாநிலம், கொச்சியில் பிரதமர் நரேந்திர மோடியால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட இருக்கும் மெட்ரோ ரயிலின் இறுதிக்கட்ட சோதனை ஓட்டம். நாள்: வெள்ளிக்கிழமை.

கேரள மாநிலம், கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் வர்த்தக சேவையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கவுள்ளார்.
கொச்சியில் முதல்கட்டமாக ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரையிலும் 13 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயிலின் வர்த்தக சேவையை பிரதமர் மோடி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
கொச்சியில் இருக்கும் ஜவாஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு மெட்ரோ ரயில் வர்த்தக சேவை தொடக்க விழா நடக்கவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மோடி காலை 10.15 மணிக்கு வருகை தரவுள்ளார்.
அப்போது அவர் பாலாரிவட்டத்தில் இருந்து பத்தடிப்பாலம் வரையிலும் மெட்ரோ ரயிலில் பயணிக்கவுள்ளார். பின்னர் அதே ரயிலில் பாலாரிவட்டத்துக்கு திரும்பும் மோடி, ஜவாஹர்லால் நேரு சர்வதேச விளையாட்டு மைதானத்துக்குச் சென்று, ரயிலின் வர்த்தக சேவையை தொடங்கி வைக்கிறார்.
விழாவில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, எர்ணாகுளம் எம்.பி. கே.வி. தாமஸ், மெட்ரோ மனிதர் என்று அழைக்கப்படும் இத்திட்ட ஆலோசகர் இ. ஸ்ரீதரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com