விளம்பரத்துக்காக எதிர்க்கட்சியினருடன் பாஜக பேச்சு: சீதாராம் யெச்சூரி

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிறுத்தப்பட இருக்கும் வேட்பாளர் குறித்து, வெறும் விளம்பரத்துக்காக எதிர்க்கட்சியினருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை வெள்ளிக்கிழமை சந்தித்து பேசிய மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிறுத்தப்பட இருக்கும் வேட்பாளர் குறித்து, வெறும் விளம்பரத்துக்காக எதிர்க்கட்சியினருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து, அந்தப் பதவிக்கு ஜூலை மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்தலில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகிய 3 பேரைக் கொண்ட குழுவை பாஜக நியமித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு ஆகிய 2 பேரும், தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். சுமார் 30 நிமிடங்களுக்கு இந்தச் சந்திப்பு நீடித்தது.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு, சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெறும் விளம்பரத்துக்காகத்தான் அவர்கள் எதிர்க்கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் நிறுத்தப்பட இருக்கும் வேட்பாளரின் பெயரை அவர்கள் தெரிவிக்கவில்லை. நாட்டின் குடியரசுத் தலைவராக மதச்சார்பற்ற தன்மைகள் கொண்ட ஒருவர்தான் வர வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இதை நான் பாஜக தலைவர்களிடம் வலியுறுத்தினேன். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்றார் சீதாராம் யெச்சூரி.
முன்னதாக, பாஜக குழுவினர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியையும் வெள்ளிக்கிழமை காலை சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com