ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமல் கிடையாது: ஜம்மு காஷ்மீர் அரசு திட்டவட்டம்! 

ஒருமித்த கருத்து ஏற்படாமல் வரும் ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை, காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி அமல் கிடையாது: ஜம்மு காஷ்மீர் அரசு திட்டவட்டம்! 

ஸ்ரீநகர்: ஒருமித்த கருத்து ஏற்படாமல் வரும் ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை, காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.டி. என்னும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை வரும் ஜூலை மாதம் 1–ந் தேதி முதல்  நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்த போவதில்லை என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் நயீம் அக்தர், ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் நேற்று  கூறியதாவது:

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மற்ற மாநிலங்களில் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனால் காஷ்மீரில் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையானது ஒன்றாம் தேதி அன்று அமல்படுத்த மாட்டாது.

பல்வேறு தரப்பினரும் இங்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறும் கருத்துக்களை அனைத்துக் கட்சி குழு ஒன்று கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யும். அந்த குழுவிடம் இருந்து விரிவான அறிக்கை கிடைத்தவுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் அது குறித்து விரிவான பேச்சுவார்த்தை  நடத்தப்படும்.

இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட மாட்டாது. அரசியலைப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கியுள்ள சில விதிவிலக்குகள் படியே, நாங்கள் செயல்படுகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com