67 ஆயிரம் ஊழியர்களின் பணித்திறன் செயல்பாடுகளை ஆய்வு செய்கிறது மத்திய அரசு

அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றாத ஊழியர்களைக் கண்டறிவதற்காக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 67 ஆயிரம் பேரின் பணித்திறன் செயல்பாடுகளை மத்திய அரசு ஆய்வு செய்கிறது.

அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றாத ஊழியர்களைக் கண்டறிவதற்காக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட சுமார் 67 ஆயிரம் பேரின் பணித்திறன் செயல்பாடுகளை மத்திய அரசு ஆய்வு செய்கிறது.
அரசு நிர்வாகம், சேவை ஆகியவற்றை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 48.85 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் சிறப்பாக செயல்படாத அரசு ஊழியர்களைக் கண்டறிவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சுமார் 67,000 பேரின் செயல்பாடுகள் குறித்த ஆவணங்களை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. அவர்களில் 25,000 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவர் என்று மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக, அந்தத் துறையின் இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கைத் தொடர்பு கொண்டு பிடிஐ செய்தியாளர் கேட்டபோது, அவர் அளித்த பதில்:
அரசுத் துறைகளில் ஊழலை ஒழிப்பதற்காகவும், நேர்மையான ஊழியர்கள் பணியாற்றுவதற்கு உகந்த சூழலை உருவாக்கவும் மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்காக, அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் பாஜக தலைமையிலான மத்திய அரசு, பணியிடமாற்றம், பயண விடுப்பு ஆகியவற்றில் பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது. அதே நேரத்தில், அவர்களின் பணித்திறன் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பையும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கடந்த ஓராண்டில், சிறப்பாக செயல்படாத 129 ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது. அதில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அடங்குவர்.
அரசு விதிகளின்படி, ஒரு அரசு ஊழியரின் பணித்திறன் செயல்பாடுகள், அவர் பணியில் இருக்கும்போது இரண்டு முறை ஆய்வுசெய்யப்படும். அதாவது அவர் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகும், அதைத் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆய்வு செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com