பசுவதைக் கூடங்களை தடை செய்ய விரைவில் சட்டம்

நாடு முழுவதும் பசுவதைக் கூடங்களைத் தடை செய்ய மத்திய அரசு விரைவில் சட்டம் இயற்றும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
பசுவதைக் கூடங்களை தடை செய்ய விரைவில் சட்டம்

நாடு முழுவதும் பசுவதைக் கூடங்களைத் தடை செய்ய மத்திய அரசு விரைவில் சட்டம் இயற்றும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
விராட் ஹிந்துஸ்தான் சங்கம் சார்பில் பசுக்களின் மகத்துவம் தொடர்பான கருத்தரங்கம், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சுப்பிரமணியன் சுவாமி பேசியதாவது:
பசுவைப் பாதுகாப்பதற்கு ஹிந்துக்களுக்கு பல வகையான காரணங்கள் இருக்கின்றன. ஹிந்துகள் வணங்கும் தெய்வமாக பசு விளங்குகிறது. அத்தகைய ஒரு புனிதமான ஜீவனைப் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நமது நாட்டைப் பொருத்தவரை, பசுப் பாதுகாவலர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஆனால், பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில சமூக விரோதிகள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பசுப் பாதுகாவலர்களை இனம் கண்டு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க வேண்டும். அப்போதுதான், பசுக்களின் பெயரில் கொலை வெறியாட்டங்கள் நடைபெறுவது தடுக்கப்படும்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதுதான், நம் நாட்டிலிருந்து ஏராளமான பசுக்கள் இறைச்சிக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மேலும், பசு ஏற்றுமதிக்கு பல்வேறு மானியங்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததும், இந்த மானியங்கள் அனைத்தும் படிப்படியாக ரத்து செய்யப்பட்டு, தற்போது இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில், நாடு முழுவதும் பசுவதைக் கூடங்களை தடை செய்ய சட்டம் இயற்றப்படும். மாட்டிறைச்சி உண்பது இஸ்லாம் மதக் கலாசாரம் கிடையாது என உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்பக் கூறி வருகிறது. ஆகையால், மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யும் சட்டம் இயற்றுவதிலிருந்து எங்களை (பாஜக அரசு) யாராலும் தடுக்க முடியாது என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com