நாளைய சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இருந்து பிகார் 'ஆப்சென்ட்' : நிதிஷ்குமார்

நாளை நாடு முழுவதும் நடைபெறும் 'சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில்' பீகார் பங்கேற்காது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
நாளைய சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் இருந்து பிகார் 'ஆப்சென்ட்' : நிதிஷ்குமார்

பாட்னா: நாளை நாடு முழுவதும் நடைபெறும் 'சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில்' பீகார் பங்கேற்காது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.

2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தது. அதில் இருந்து, மோடியின் முயற்சியால் 'சர்வதேச யோகா தினம்' கடந்த 2015-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில் இந்த வருடமும் சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை நாடு முழுவதும் நடைபெறும் 'சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில்' பீகார் பங்கேற்காது என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

நாளை நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களில் பீகார் பங்கேற்காது. தனிப்பட்ட முறையில் நான் யோகாவிற்கு எதிரானவன் அல்ல. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது வெறுமனே அரசியல் விளம்பரத்திற்காக மட்டுமே இந்த யோகா தின நிகழ்ச்சிகளை  நடத்துகிறது.

எனவே இத்தகைய விளம்பர விளையாட்டில் பங்கேற்க நான் விரும்பவில்லை. நானும்தான் யோகா செய்கிறேன். ஆனால் அதனை நான் எங்கும் விளம்பரப்படுத்துவது கிடையாது.

இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com