விவசாயக் கடன் ரத்து இல்லை: அருண் ஜேட்லி அறிவிப்பு

விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி
விவசாயக் கடன் ரத்து இல்லை: அருண் ஜேட்லி அறிவிப்பு

புதுதில்லி: புதுதில்லி: விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்று நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்வது குறித்த பரிசீலனை மத்திய அரசிடம் இல்லை என கூறினார்.

மேலும், இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்கள், தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்காக ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு கூட்டத்தில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்கள். மன்மோகன்சிங், தேவ கவுடா ஆகியோர் பங்கேற்கின்றனர். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு அருண் ஜேட்லியின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com