திரிபுரா பேரவைத் தேர்தல்: வேட்பாளர் தேர்வில் பாஜக மும்முரம்

திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை பாஜக தொடங்கியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை பாஜக தொடங்கியுள்ளது.
திரிபுராவில் 1993-ஆம் ஆண்டில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் மாணிக் சர்க்கார் 1998-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை பதவியில் தொடர்கிறார்.
இந்நிலையில், அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. திரிபுராவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். அங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர் தேர்வை பாஜக தொடங்கிவிட்டது.
அகர்தலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில பாஜக தலைவர் விப்ளவ் தேவ் கூறியதாவது:
திரிபுராவில் 68 சதவீத வாக்காளர்கள் 45 வயதுக்குள்பட்டவர்கள், எனவே, எங்கள் வேட்பாளர்களில் 70 சதவீதம் பேர் 40 வயதுக்குள்பட்டவர்களாக இருப்பார்கள்.
மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள இடதுசாரி அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.
திரிபுரா பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும். எனினும், வேட்பாளர் தேர்தலில் பாஜக எந்த சமசரமும் செய்து கொள்ள மாட்டோம். மக்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களையும், படித்தவர்களையும், பண்பாளர்களையும் வேட்பாளர்களாகத் தேர்வு செய்வோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com