பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவா?: பிஜேடி மழுப்பல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதாதளம் (பிஜேடி) கட்சித்

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஒடிஸா முதல்வரும், பிஜு ஜனதாதளம் (பிஜேடி) கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் மழுப்பலாக பதிலளித்தார்.
இது தொடர்பாக புவனேசுவரத்தில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களிடம் ஆலோசிக்க வேண்டும். அதன் பிறகுதான் ஆதரவு குறித்து முடிவு எடுப்போம். கட்சிக்குள் ஆலோசனை நடத்திய பிறகு எங்களது முடிவை அனைவருக்கும் தெரிவிப்போம்.
குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசினாரா என கேட்கிறீர்கள். இதுவரை எவரும் என்னிடம் பேசவில்லை என்றார் பட்நாயக்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளராக பிகார் மாநில ஆளுநர் ராம்நாத் கோவிந்தை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் உள்பட பல்வேறு தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி விவாதித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கோவிந்த் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோருடன் ஒடிஸாவைச் சேர்ந்த பாஜக பிரமுகரும் ஜார்க்கண்ட் ஆளுநருமான திரௌபதி முர்மு பெயரும் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com