மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்துவோம்: சிபிஐ

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 6 பேருக்கும் மரண தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்த உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் 6 பேருக்கும் மரண தண்டனை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வலியுறுத்த உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தண்டனை மீதான விவாதங்களை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு குற்றவாளி ஃபெரோஸ் கான் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 257 பேர் பலியாகினர். 713 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்திய வரலாற்றில் நீங்காத துயரத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் உள்பட 100 பேரை குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அபு சலேம், முஸ்தபா டோஸா, கரீமுல்லா கான், ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்ச்சென்ட், அப்துல் கயூம் ஆகிய 7 பேருக்கு எதிரான இரண்டாவது வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் அப்துல் கயூமைத் தவிர மற்ற அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் அவர்களுக்கு விதிக்கப்படவுள்ள தண்டனை மீதான வாதங்கள், மும்பையில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கின. அப்போது, தண்டனை மீதான வாதங்களை ஒத்திவைக்குமாறு குற்றவாளி ஃபெரோஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதி நிராகரித்தார்.
முன்னதாக, குற்றவாளிகள் 6 பேருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் போவதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com