குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தேர்வு!  

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தேர்வு!  

புதுதில்லி:   குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விரைவில் நடைபெறவிருக்கும் குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டார்.  அதைத் தொடர்ந்து எதிர்கட்சிகளின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்ய  எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் இன்று மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர் பங்கேற்கின்றனர்.திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார். 

குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை பாஜக நிறுத்தியுள்ளது.எனவே, அவரை எதிர்த்து மற்றொரு வலுவான தலித் தலைவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து இருந்தன.

அதன்படி கூட்டத்தின் முடிவில் முன்னாள் மக்களவை சபாநாயகரும், விடுதலை போராட்டவீரர் பாபு ஜெகஜீவன் ராமின் புதல்வியுமான மீரா குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com