முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், ராம் நாத் கோவிந்த் சந்திப்பு

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த் இன்று சந்தித்துப் பேசினார் 
முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன், ராம் நாத் கோவிந்த் சந்திப்பு

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த் இன்று சந்தித்துப் பேசினார் 

குடியரசுத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தலித் தலைவரான ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். அவரை காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், பாஜக வேட்பாளரின் வெற்றிவாய்ப்பு எளிதாகியுள்ளது. இருப்பினும், அவருக்கு கடுமையான போட்டியைத் தர முனைப்பு காட்டி வரும் எதிர்க்கட்சிகள், தங்களது சார்பில் வலிமையான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த ஆயத்தமாகி வருகின்றன. ராம்நாத் கோவிந்த் தலித் என்பதால் அவருக்கு எதிராக அதே சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரைக் களமிறக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. 

இதனிடையே பாஜக மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்த் இன்று தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முன்னதாக ராம் நாத் கோவிந்த் நேற்று பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com