பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதே ஆசியான், இந்தியாவின் பணி: சுஷ்மா

பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தியாவும், ஆசியான் அமைப்பும் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) பணியாற்றி வருகின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

பிராந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தியாவும், ஆசியான் அமைப்பும் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு) பணியாற்றி வருகின்றன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஆசியான் ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது ஆசியான் நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தகம் வெகுவாக அதிகரித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு நிதி செல்வதைத் தடுப்பது, ஆயுதக் கடத்தல், கருப்புப் பணத்தடுப்பு நடவடிக்கை, ஆள் கடத்தல், இணையவழியில் நடைபெறும் குற்றங்களைத் தடுப்பது ஆகியவை ஆசியப் பிராந்தியத்தில் பெரும் பிரச்னையாக உள்ளன. இதனை எதிர்கொள்ள இந்தியாவும், ஆசியான் நாடுகளும் தொடர்ந்து முனைப்புடன் போராட வேண்டும்.
ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தியாவும், ஆசியான் நாடுகளும் முனைப்புடன் பணியாற்றி வருகின்றன. கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
இந்திய வர்த்தகத்தில் 10 சதவீதம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன்தான் நடந்து வருகிறது. ஆசியான் நாடுகளுடன் 6 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், அது மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாக அமையும்.
கடல், வான் வழியாக மட்டுமின்றி மின்னணு முறையில் ஆசியான் நாடுகளுடனான தொடர்பை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கலாசாரரீதியாகவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியா நெருங்கிய தொடர்புடையது. முக்கியமாக தாய்லாந்து, வியத்நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் ஹிந்து மதக் கோயில்கள், சிற்பங்கள் உள்ளிட்டவை உள்ளன. மியான்மர், இந்தோனேஷியாவில் புத்த மதக் கோயில்கள் அமைந்துள்ளன. இந்நாடுகள் பண்டைய காலம் முதலே இந்தியாவு
டன் நெருங்கிய தொடர்புடையவை என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com