காங்கிரஸில் இருந்து விலகுகிறார் சங்கர்சிங் வகேலா?

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழிவுப் பாதையை பின்பற்றினால், அக்கட்சியில் நீடிக்க மாட்டேன் என்று குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான
காங்கிரஸில் இருந்து விலகுகிறார் சங்கர்சிங் வகேலா?

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழிவுப் பாதையை பின்பற்றினால், அக்கட்சியில் நீடிக்க மாட்டேன் என்று குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சங்கர்சிங் வகேலா எச்சரித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் எந்நேரமும் விலகலாம் எனக் கூறப்படுகிறது.

குஜராத் மாநிலம், காந்திநகரில் சங்கர்சிங் வகேலா தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர், குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தலுக்கு கட்சி இன்னமும் தன்னை தயார்ப்படுத்தாமல் இருப்பதாகவும், கட்சி தொடர்ந்து தற்கொலைப் பாதையை பின்பற்றுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
குஜராத் சட்டப் பேரவைக்கு கட்சியை தயார்படுத்த வேண்டிய அவசியம் குறித்து நான் பேசுகிறேன். ஆனால், மற்ற தலைவர்கள் என்னை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு ரகசியமாக செயல்படுகின்றனர்.
எனது கவலைகள் குறித்து தில்லியில் இருக்கும் கட்சித் தலைமையிடம் தெரிவித்து விட்டேன். ஆனால், அவர்கள் இன்னமும் செயல்படாமல் இருக்கின்றனர். உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்த நிலையில், குஜராத் மாநிலத்தில் மிகவும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு போதிய தொலைநோக்கு பார்வையில்லை.
முன்னால் இருக்கும் பெரிய குழியில் விழ வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் எனில், அவர்கள் போய் விழட்டும். நான் அந்த வழியைப் பின்பற்ற மாட்டேன்.
கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அடுத்த மாதம் நாடு திரும்பியதும் அவரை சந்தித்து பேசவிருக்கிறேன் என்றார் சங்கர்சிங் வகேலா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com