நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 17-இல் தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 17 முதல் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 17-இல் தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 17 முதல் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்தக் கூட்டத்தொடரை மேற்கண்ட நாள்களுக்கு நடத்தப் பரிந்துரைத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற அமைச்சரவைக் குழு கூடி, அடுத்த கூட்டத்தொடருக்கான நாள்களை இறுதிசெய்தது.
எனினும், மக்களவை எம்.பி. வினோத் கன்னா, மாநிலங்களவை எம்.பி. பல்லவி ரெட்டி ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், கூட்டத்தொடரின் முதல் நாளில் (ஜூலை 17) எந்த அலுவலையும் மேற்கொள்ளாது என்று தெரிகிறது.
வழக்கமாக, ஜூலை மாத கடைசி வாரத்தில் தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர், இந்த ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் காரணமாக முன்கூட்டியே தொடங்குகிறது. தேர்தல் நடைபெறும் நாளான ஜூலை 17 அன்று, நாடாளுமன்ற இரு அவைகளின் மொத்த எம்.பி.க்களான 776 பேரும் தலைநகர் தில்லியில் இருப்பதை உறுதி செய்யவே அந்த நாளில் நாடாளுமன்றம் தொடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், எம்.பி.க்கள் தங்களது சொந்த மாநிலத்தில் இருந்தபடியே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com