கோவாவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறுபான்மையினர் எதிர்ப்பு

கோவாவில் வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
கோவாவில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறுபான்மையினர் எதிர்ப்பு

கோவாவில் வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவா தொழில் மற்றும் வர்த்தக சபை சார்பில் பனாஜியில் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில், நிதின் கட்கரி பங்கேற்றுப் பேசியதாவது:
வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசிடம் போதுமான நிதி உள்ளது. எனினும், கோவாவை வளர்ச்சிப் பாதைக்கு செல்லவிடாமல் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலர் குறுக்கீடு செய்து வருகின்றனர். கோவாவை மேலும் வளர்ச்சியடையச் செய்ய உண்மையிலேயே நாங்கள் ஆர்வமாக உள்ளோம். குறிப்பாக, இங்குள்ள துறைமுகங்களை மேம்படுத்த திட்டமிட்டிருந்தோம்.
எனினும், சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, இந்த திட்டம் கர்நாடகம் அல்லது மகாராஷ்டிரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
கோவாவில் மக்கள் விரும்பினால், வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். மக்களுக்கு விருப்பமில்லையெனில், அவை வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படும். வடக்கு கோவாவில் தேசிய நெடுஞ்சாலை 17-இல் தொடங்கி மோபா விமான நிலையம் வரை நான்கு வழிச் சாலையை உருவாக்குவதற்காக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ரூ. 600 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஜுவாரி உள்ளிட்ட நதிகள் மூலம் மோபா விமான நிலையம் வரை நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதற்கு சாத்தியக்கூறு உள்ளதா? என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்.
இதுபற்றி ஆய்வு செய்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். ஜுவாரி மற்றும் மாண்டவி நதிகளைத் தூர்வாரும் பணிகளுக்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் நிதின் கட்கரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com