ஜூன் 28-இல் தில்லி சட்டப்பேரவைக் கூட்டம்

தில்லி சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 28}ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவைக் கூட்டம் ஜூன் 28}ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையின் செயலாளர் பிரசன்ன குமார் சூர்யதேவரா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆறாவது தில்லி சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் கடந்த மே 31}ஆம் தேதிக்கு பேரவைத் தலைவர் ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையின் அலுவல் விதி, நடைமுறைகள் 17}ஆவது விதிப்படி, ஆறாவது தில்லி சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தை ஜூன் 28}ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கூட்டுவதற்கு பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் முடிவு செய்துள்ளார் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பதவி விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்எல்ஏக்கள் மீதான புகார்கள் விசாரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை (ஜூன் 24) தெரிவித்துள்ளது. இதனிடையே, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விவகாரத்தில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மனைவி ஆகியோரிடம் சிபிஐ அண்மையில் விசாரணை மேற்கொண்டது.
இந்த விவகாரங்களை ஆளும்கட்சி உறுப்பினர்கள் எழுப்புவார்கள் என்றும், மாநகராட்சிகளுக்கு போதுமான நிதி, மழை வெள்ளப் புகார்கள் தொடர்பான விவகாரங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com