நேபாளத்துக்கு பயணிக்க ஆதாரைப் பயன்படுத்த முடியாது: மத்திய அரசு

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு செல்ல அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூடானுக்கு செல்ல அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மற்ற வெளிநாடுகளைப் போல் அல்லாமல் நேபாளம், பூடானுக்குச் செல்வதற்கு இந்தியர்கள் விசா வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாடுகளுக்குச் செல்ல கடவுச்சீட்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலே போதுமானது.
மேலும், இந்த நாடுகளுக்கான பயணங்களை இன்னும் எளிமையாக்குவதற்காக, 15 வயதுக்கு உட்பட்டவர்களும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் தங்களிடமுள்ள வயது சரிபார்ப்பு அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட இரு நாடுகளுக்கும் செல்வதற்கு ஆதார் அட்டையே போதுமானது என தகவல்கள் பரவின. ஆனால், மத்திய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், "நேபாளம், பூடான் ஆகிய நாடுகளுக்கு செல்ல அதிகாரப்பூர்வ ஆவணமாக ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியாது' எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com