ரமலான் கொண்டாட்டம்: டார்ஜீலிங் போராட்டம் 12 மணி நேரம் ஒத்திவைப்பு

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப் பகுதியில் முஸ்லிம்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் 12 மணி நேரம் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப் பகுதியில் முஸ்லிம்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் 12 மணி நேரம் போராட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், கடைகள் திறக்கப்படமாட்டாது என்றும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி, கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சியினர் கடந்த 10 தினங்களாக நடத்திவரும் போராட்டத்தினால், டார்ஜீலிங் மலைப் பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மருந்துக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும், உணவகங்களும், தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரமலான் பண்டிகையை யொட்டி, திங்கள்கிழமை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முஸ்லிம்கள் வாகனங்களில் வெளியே செல்ல அனுமதிக்கலாம் என்று ஜிஜேஎம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ரமலான் பண்டிகையை யொட்டி, உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும் முஸ்லிம்கள் வாகனங்களில் செல்ல திங்கள்கிழமை அனுமதிக்கப்படுவார்கள்.
அதேநேரம், என்ன காரணத்துக்காக அவர்கள் வெளியே செல்கிறார்கள் என்று வாகனங்களின் முன்பகுதியில் பலகையில் எழுதி வைத்திருக்க வேண்டும். கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com