யோகி ஆதித்யாநாத் அரசின் 100 நாள் ஆட்சி சாதனை!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் தனது அரசின் 100 நாள் ஆட்சியில் நடைபெற்ற சாதனை பட்டியலை இன்று வெளியிட்டார் யோகி
யோகி ஆதித்யாநாத் அரசின் 100 நாள் ஆட்சி சாதனை!

லக்னெள: உத்தரபிரதேசம் மாநிலத்தில் தனது அரசின் 100 நாள் ஆட்சியில் நடைபெற்ற சாதனை பட்டியலை வெளியிட்டார் யோகி ஆதித்யாநாத்.

உத்தரபிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றிபெற்றது பாஜக. இதையடுத்து மார்ச் 19 ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யாநாத், அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்.

அதில்,  தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், முன்னர் மாநிலத்தை வழிநடத்திய சமாஜ்வாதி கட்சியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் தொடர்பாக புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை நேற்று முன்தினம் (ஜூன் 25) பிற்பகல் செய்தியாளர்கள் முன்னிலையில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டார்.

மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாஜக, 26.03.2017-க்கு பின்னர் கடந்த 100 நாட்களில் ஒவ்வொரு அமைச்சகத்தின் சார்பாக வெளியான அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டப் பணிகள் தொடர்பான சாதனை பட்டியல் அடங்கிய கையேட்டினை யோகி ஆதித்யாநாத் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய யோகி ஆதித்யாநாத் கடந்தகால ஆட்சியில் மாநிலத்தின் முன்னேற்றம் பின்னுக்கு தள்ளப்பட்டு, லஞ்ச ஊழலும் கொள்ளையும் அரங்கேறியதாக குற்றம்சாட்டினார்.

ஒரு மாநிலத்தின் பொருளாதாரம், வளர்ச்சியானது, விவசாயியத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை குறிப்பிட்டு, அவர்களின் நல்வாழ்வை ஒட்டியே அரசு அமைந்திருக்கும் என்பதால் விவசாயிகள் தொடர்பான நலத்திட்டங்களுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும்.

பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கரும்பு விவசாயிகளுக்கு செலுத்தப்படாமல் இருந்த பாக்கி தொகையான 22 ஆயிரத்து 517 கோடி ரூபாயை வழங்கி இருக்கிறோம்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தை முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தி செல்ல நாங்கள் சபதம் ஏற்றுள்ளோம். இந்த (2017) ஆண்டு முழுவதும் ஏழை எளியவர்களுக்கான 'கரீப் கல்யாண் வர்ஷ்'  (Garib Kalyan Varsh)  நலத்திட்ட ஆண்டாக அனுசரிக்கப்படும்.

விவசாய கடன் தள்ளுபடி மற்றும் சட்ட ஒழுங்கை உயர்த்துவதில் மாநில அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளையும் அவர் கூறினார்.

மேலும், அரசு தொடர்ந்து முன்னேற்றத்தை நோக்கி சென்றிட ஊடகங்கள் தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்று ஆதித்யநாத் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com