குடியரசுத் தலைவர் தேர்தலை கொள்கை ரீதியில் அணுக வேண்டாம்: வெங்கய்ய நாயுடு

குடியரசுத் தலைவர் தேர்தலை கொள்கை ரீதியில் அணுக வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலை கொள்கை ரீதியில் அணுக வேண்டாம்: வெங்கய்ய நாயுடு

குடியரசுத் தலைவர் தேர்தலை கொள்கை ரீதியில் அணுக வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலை கொள்கை ரீதியிலான போட்டியாக மாற்ற காங்கிரஸ் முயன்று வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. எனவே, இந்தத் தேர்தலை கொள்கை ரீதியில் எதிர்க்கட்சிகள் அணுகக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்.
குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது மிக முக்கியமானது ஆகும். சட்டங்களை இயற்றும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு இல்லையென்றாலும், அந்தச் சட்டங்ளை செயல்படுத்துவதற்கு அவரது ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். அவ்வாறு இருக்கையில், அரசமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஒருவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுப்பதே நல்லது. இல்லையெனில், ஒட்டுமொத்த நாடே பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகிவிடும்.
உதாரணமாக, அமைச்சரவையின் ஒப்புதலைக் கூட பெறாமல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைச் சட்டத்தை 1975-ஆம் ஆண்டில் கொண்டு வந்தார். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் மீறி, அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது அச்சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். இந்த அவசர நிலைச் சட்டத்தால் ஜனநாயக மாண்புகள் எவ்வாறெல்லாம் நசுக்கப்பட்டன என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே, அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் ஒருவரே குடியரசுத் தலைவர் பதவிக்கு தேவை. இதன் காரணமாகவே, அந்தத் தகுதியைக் கொண்டுள்ள ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிறுத்தியுள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com