வியாபம் முறைகேடு, மல்லையா விவகாரத்தையும் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்

கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழல் புகார் எதுவும் இல்லை என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடி, வியாபம் முறைகேடு, தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி

கடந்த 3 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழல் புகார் எதுவும் இல்லை என்று கூறும் பிரதமர் நரேந்திர மோடி, வியாபம் முறைகேடு, தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது உள்ளிட்டவை குறித்தும் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா திங்கள்கிழமை கூறியதாவது:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள விர்ஜினியாவில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் மத்தியில் எதிர்க்கட்சிகளை விமர்சித்து, அரசியல் கூட்டத்தில் பேசுவதுபோல பேசினார்.
தனது 3 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் புகார் இல்லை என்று கூறும் அவர், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் நிகழ்ந்த முறைகேடுகளையும் பேச வேண்டும்.
மேலும், அரசியல் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்த விவரங்கள் இடம்பெற்றுள்ள சஹாரா நிறுவனத்தின் டைரிக் குறிப்புகளில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதையும் து என்றும் மோடி பேச வேண்டும்.
முறைகேடு வழக்குகளில் சிக்கி லலித் மோடி, விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றது குறித்தும் பேச வேண்டும்.
முக்கியமாக, ஹெச் 1பி விசா விவகாரம், அமெரிக்காவில் இந்தியர் மீதான இனவெறித் தாக்குதல், அணுச்தி விநியோகக் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராகும் முயற்சி, இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைக் கட்டவிழ்க்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது ஆகியவற்றை டிரம்ப் நிர்வாகத்திடம் மோடி எழுப்ப வேண்டும் என்று சுர்ஜேவாலா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com