ஊழல் புகார்: 39 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை

"ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களது செயல்பாடுகள், நிர்வாகத் திறன் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்குட்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
ஊழல் புகார்: 39 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை

"ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான 39 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவர்களது செயல்பாடுகள், நிர்வாகத் திறன் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்குட்படுத்தி வருவதாகத் தெரிகிறது.
இந்த விசாரணை நடவடிக்கைகளை மத்திய பணியாளர் நலத் துறை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்திறனானது அவர்களது பணிக் காலத்தில் இருமுறை ஆய்வுக்குட்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களின் செயல்திறனை அண்மையில் ஆய்வுக்குட்படுத்தியதில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சரிவரப் பணியாற்றாதது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டுக்குள் சரிவரப் பணியாற்றாத 129 ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழல் புகார்களுக்கு ஆளான ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட பல்வேறு உயர் நிலை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 39 ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் மட்டுமன்றி மத்திய அரசுச் செயலகங்களில் பணியாற்றும் 29 அதிகாரிகள் மீதும் லஞ்சப் புகார்கள் வந்தன. அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது மத்திய பணியாளர் நலத் துறை. மொத்தம் 68 உயர் நிலை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் மீதான புகார்கள் மட்டுமன்றி, சம்பந்தப்பட்டவர்களின் செயல்திறனையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com