பாரம்பரிய உடையணிந்த பெண்ணை வெளியேற்றிய தில்லி கோல்ஃப் கிளப்

தில்லி கோல்ஃப் கிளப்புக்கு பாரம்பரிய உடையணிந்து வந்த மேகாலய மாநிலப் பெண்ணை அந்த கிளப் நிர்வாகம் வெளியேற்றியது.
பாரம்பரிய உடையணிந்ததால் தில்லி கோல்ஃப் கிளப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தைலின் லிங்டோ.
பாரம்பரிய உடையணிந்ததால் தில்லி கோல்ஃப் கிளப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட தைலின் லிங்டோ.

தில்லி கோல்ஃப் கிளப்புக்கு பாரம்பரிய உடையணிந்து வந்த மேகாலய மாநிலப் பெண்ணை அந்த கிளப் நிர்வாகம் வெளியேற்றியது.

இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தில்லி கோல்ஃப் கிளப் நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுள்ளது. இது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள கோல்ஃப் கிளப்பில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பணியாளர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, மேகாலயத்தைச் சேர்ந்த தைலின் லிங்டோ (51) என்ற பெண்மணி, தங்கள் மாநிலத்தின் பராம்பரியமான "ஜெய்ன்ஸம்' உடையணிந்து விருந்துக்கு வந்திருந்தார்.
அப்போது, தில்லி கோல்ஃப் கிளப்பைச் சேர்ந்த இரு பணியாளர்கள் அவரிடம் வந்து, நீங்கள் பணிப்பெண் போல உடையணிந்து வந்துள்ளீர்கள். எனவே, உங்களை கிளப்பில் அனுமதிக்க முடியாது என்று கூறி வெளியேற்ற வலியுறுத்தினர்.
தைலின்னை விருத்துக்கு அழைத்திருந்த அவரது நிறுவன உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து கிளப் மேலாளரிடம் புகார் அளித்தார். அப்போது, இதுபோன்ற உடையணிந்தவர்களை எங்கள் கிளப்பில் அனுமதிக்க மாட்டோம். அவர் கண்டிப்பாக வெளியேற வேண்டும் என்று கூறிவிட்டார். இதையடுத்து தைலின் அங்கிருந்து வெளியேறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
பாரம்பரிய உடையணிந்து இதற்கு முன்பு பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால், எந்த இடத்திலும் இதுபோன்ற சூழ்நிலையைச் சந்தித்தது இல்லை என்றார்.
தைலின் பணியாற்றி வரும் நிறுவனத்தின் உரிமையாளர் நிவேதிதா பர்தாக்குர் சோன்தி இது தொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், தைலின் தனது பாரம்பரிய உடையில் லண்டன் முதல் ஐக்கிய அரபு அமீரகம் வரை சென்று வந்துள்ளார். அங்கு அவருக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. ஆனால், தில்லியில் உள்ள கோல்ஃப் கிளப்பில் அவரது உடையை காரணமாகக் கூறி வெளியேற்றி உள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
தில்லி கோல்ஃப் கிளப்பின் செயல்பாட்டுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்துக்காக கோல்ஃப் கிளப் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக தங்கள் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளது.
இனப்பாகுபாடு - மத்திய அமைச்சர் கண்டனம்: இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை இணையமைச்சரும், வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு கூறியதாவது:
பாரம்பரிய உடையணிந்து சென்ற மேகால மாநிலத்துப் பெண்ணை, பணிப்பெண் போல உடையணிந்து வந்ததாகக் கூறி வெளியேற்றிதற்கு இனரீதியாக பாகுபாடு பார்த்ததுதான் காரணம். இதுபோன்ற மனநிலையில் உள்ளவர்களால் சமூக ஒருமைப்பாட்டுக்கு பிரச்னை ஏற்படுகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல்துறை ஆணையரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com