மோடி-டிரம்ப் கூட்டறிக்கை அதிருப்தியளிக்கிறது: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை அதிருப்தி அளிக்கிறது. அதில், இரு நாடுகளிடையிலான
மோடி-டிரம்ப் கூட்டறிக்கை அதிருப்தியளிக்கிறது: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை அதிருப்தி அளிக்கிறது. அதில், இரு நாடுகளிடையிலான உறவில் புதிய அல்லது பெரிய சிந்தனைகள் எதுவும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி குறைகூறியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்திய-அமெரிக்க கூட்டறிக்கை குறித்து சுருக்கமாகக் கூறவேண்டுமானால், அது அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.
பழைய விஷயங்களே அதில் உள்ளன. இருதரப்பு உறவுகள் தொடர்பான புதிய அல்லது பெரிய சிந்தனைகள் எதுவும் கூட்டறிக்கையில் காணப்படவில்லை. இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து விளக்கமளிக்கும்போது இந்தியாவின் நிலைப்பாடும், அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசின் நிலைப்பாடும் ஒன்றாக இருப்பதில்லை என்றார் மணீஷ் திவாரி.
பாஜக விமர்சனம்: இந்நிலையில், காங்கிரஸின் விமர்சனத்துக்கு பதிலளித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமரின் அமெரிக்கப் பயணம் மற்றும் அந்நாட்டின் புதிய அதிபர் டிரம்ப்புடனான சந்திப்பு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள முக்கியமான விளைவுகளைக் காண்பதற்கு காங்கிரஸ் வேண்டுமென்றே மறுக்கிறது. இதற்கு பொறாமையும் குற்ற உணர்ச்சியுமே காரணமாகும். ஏனெனில், பிரதமரின் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணமும் 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாம் இழந்த வாய்ப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
வெள்ளை மாளிகையும், அமெரிக்க அதிபரும் மோடிக்கு அளித்த பிரம்மாண்ட வரவேற்பானது, உலக பொருளாதார, புவி-அரசியல் களத்தில் இந்தியாவுக்குஅதிகரித்து வரும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. மோடியின் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அமெரிக்க அதிபர் அங்கீகரித்திருப்பது காங்கிரûஸ அதிருப்தியடையச் செய்துள்ளது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள போர் பற்றி டிரம்ப் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்திய-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே பிரதமரின் இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அது தவிர, பயங்கரவாத அச்சுறுத்தல் உள்பட பல்வேறு பிராந்திய, உலகளாவிய விஷயங்கள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை பற்றிய கருத்துப் பரிமாற்றமும் அதன் நோக்கமாக உள்ளது. அந்த வகையில் பிரதமரின் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அது இரு தலைவர்களும் ஊடகங்களுக்கு அளித்த கூட்டறிக்கையில் பிரதிபலித்துள்ளது என்று வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com