பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஜூலை 1 முதல் கட்டாயம்: மத்திய அரசு

நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைப்பது ஜூலை 1 முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது ஜூலை 1 முதல் கட்டாயம்: மத்திய அரசு

நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணை இணைப்பது ஜூலை 1 முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், புதிய பான் அட்டைக்காக விண்ணப்பிப்பவர்களும் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் மத்திய அரசு விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வரி செலுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகவும், ஒருவர் பல்வேறு பான் எண்களை வைத்துக் கொண்டு வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாகவும், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
அரசின் இந்த உத்தரவானது, மக்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசின் உத்தரவு சரியானதுதான் எனத் தெரிவித்தது.
அதேசமயத்தில், இந்த உத்தரவு, மக்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுகிது என்பது குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்குப் பரிந்துரைத்ததுடன், அதில் தீர்ப்பு வெளியாகும் வரை மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடையையும் உச்ச நீதிமன்றம் விதித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதிய அறிவிக்கை ஒன்றை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வருமான வரி செலுத்துபவர்கள் தங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இது, ஜூலை 1 முதல் கட்டாயமாக்கப்படுகிறது.
மேலும், ஜூலை 1-ஆம் தேதிக்குப் பிறகு பான் அட்டைக்காக விண்ணப்பிப்பவர்கள், அதற்கான விண்ணப்பப் படிவத்தில் ஆதார் எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதுதவிர, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோரும் ஆதார் எண்ணைத் தெரிவிக்க வேண்டும் என அந்த அறிவிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, நாட்டில் இதுவரை 2.07 கோடி பேர் மட்டுமே தங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்கின்றனர். மேலும், வருமான வரி செலுத்தும் 25 கோடி பேர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com