ராம்நாத் கோவிந்த் வேட்புமனு ஆவணங்கள்: சமர்ப்பித்தார் வெங்கய்ய நாடு

 குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் சார்பில், அவரது வேட்புமனு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு சமர்ப்பித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சார்பில் அவரது வேட்புமனு ஆவணங்களை தில்லியில் தேர்தல் அதிகாரியிடம் புதன்கிழமை சமர்ப்பித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயு
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் சார்பில் அவரது வேட்புமனு ஆவணங்களை தில்லியில் தேர்தல் அதிகாரியிடம் புதன்கிழமை சமர்ப்பித்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயு

 குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் சார்பில், அவரது வேட்புமனு தொடர்பாக மேலும் சில ஆவணங்களை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு புதன்கிழமை சமர்ப்பித்தார்.

தில்லியில் தேர்தல் அதிகாரியிடம் இந்த ஆவணங்களை வெங்கய்ய நாயுடு சமர்ப்பித்தபோது, மத்திய அமைச்சர் அனந்த் குமார், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மேகபதி ராஜ்மோகன் ரெட்டி, பாஜக பொதுச் செயலர் பூபேந்திர யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் கடந்த 23}ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில், குறைந்தது 50 எம்எல்ஏக்கள், 50 எம்.பி.க்களின் ஆதரவுக் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆவணங்களை சமர்ப்பித்தாக வேண்டும்.
அன்றைய தினம், வேட்புமனு தொடர்பாக, 3 வகையான ஆவணங்களை மட்டுமே ராம்நாத் கோவிந்த் தாக்கல் செய்திருந்தார். தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக, அவர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான புதன்கிழமை, ராம்நாத் கோவிந்த் சார்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com