கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட 'சூப்பர்சோனிக் இன்டர்செப்டார்' ரக ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனைக்காக ...
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு! 

புதுதில்லி: கண்டம் விட்டு கண்டம் சென்று எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்ட 'சூப்பர்சோனிக் இன்டர்செப்டார்' ரக ஏவுகணையின் வெற்றிகரமான பரிசோதனைக்காக விஞ்ஞானிகளுக்கு  பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது ராணுவ வலிமையை வெகுவாக அதிகரிக்க இந்தியா அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆய்வுகளை பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி நிறுவனம் பல்வேறு ஆயுதங்களை தயாரித்து, சோதனை நடத்துவதன் மூலம் வெற்றி கண்டு வருகிறது.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் தாக்கும் திறனுள்ள சூப்பர்சோனிக் இன்டர்செப்டார் ரக ஏவுகணையின் பயன்பாட்டு சோதனை  நேற்று நடைபெற்றது. இந்த சோதனை வெற்றியடைந்துள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு நேற்று வெளியிட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இன்று காலை இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு  விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இன்று தனது டிவிட்டர் செய்தியில், 'இத்தகைய வல்லம கொண்ட ஏவுகணையை வைத்திருக்கும் 5 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்து இருப்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் பெருமை அளிக்கும் விஷயம்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com